பிரித்தானியாவில் இந்தியரை நல்லவர் என நம்பி அதிகாலையில் அவருடன் சென்ற பெண்... நேர்ந்த விபரீத சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் பெண்ணை பலாத்காரம் செய்த இந்தியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அஜய் ராணா (35) என்ற நபர் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில் Suffolk கவுண்டியில் அதிகாலை 5 மணிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 30 வயது உள்ள பெண்ணொருவர் சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் அவர் அருகில் சென்ற ராணா அவருக்கு லிப்ட் கொடுத்தார்.

அப்பெண்ணும், ராணா பார்ப்பதற்கு நல்லவர் போல தெரிந்ததால் அவருடன் காரில் ஏறி சென்றார்.

அடுத்த அரைமணி நேரத்தில் காரை நிறுத்திய ராணா அப்பெண்ணை பலாத்காரம் செய்தார்.

பின்னர் அப்பெண் அங்கிருந்து தப்பியோடி அருகில் உள்ள தனது தோழி வீட்டுக்கு சென்ற நிலையில் பொலிசாருக்கு இது குறித்து தகவல் தரப்பட்டது.

சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்த நிலையில் ராணாவின் கார் மட்டும் அங்கிருந்த நிலையில் அவர் தப்பியோடியது தெரியவந்தது.

அவர் நண்பர்களிடம் பொலிசார் விசாரித்த போது ராணா லண்டனில் தான் தங்கிருந்த வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும், அவர் தாய்க்கு உடல்நலக்குறைவு என எங்களிடம் கூறியதாகவும் தெரிவித்தனர்.

மேலும் தனது தாயை காண இந்தியாவுக்கு அவர் செல்லவுள்ளதாகவும் கூறினர்.

காரில் இருந்த ராணா பயன்படுத்திய ஹெட்போனில் உள்ள டிஎன்ஏ மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் டிஎன்ஏவை சேர்த்து பரிசோதித்ததில் ராணா தான் குற்றவாளி என தெரிந்தது.

பின்னர் டிசம்பர் 12 2017-ல் ராணா இந்தியாவுக்கு தப்பியுள்ளார்.

இந்த சமயத்தில் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளுக்குள் ராணா புகுந்தால் அவரை கைது செய்யும் ஆணையை பிரித்தானிய பொலிசார் பெற்றனர்.

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டுக்கு தப்பி சென்ற ராணாவை பொலிசார் கடந்தாண்டு அக்டோபர் 22ஆம் திகதி கைது செய்தனர்.

பின்னர் பிரித்தானியாவுக்கு அழைத்து வரப்பட்ட அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் ராணாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers