டிரம்புக்கு அளித்த சிறப்பு விருந்து: பிரித்தானிய ராணியார் அணிந்திருந்த அந்த நகைகள் இதற்காகவா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிரித்தானியா வருகையை முன்னிட்டு பக்கிங்காம் அரண்மனையில் அளிக்கப்பட்ட விருந்தில் ராணியார் தலையில் அணிந்திருந்த டியாரா தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு எலிசபெத் ராணியார் அளித்த விருந்தானது ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றது.

குறித்த விருந்தில் எலிசபெத் ராணியார் தலையில் அணிந்திருந்த மாணிக்க டியாரா தொடர்பிலேயே தற்போது விவாதம் எழுந்துள்ளது.

பர்மிய மாணிக்க கற்களாலும் வைரத்தாலும் உருவாக்கப்பட்டதாகும் அந்த டியாரா. மட்டுமின்றி பிலிப் இளவரசருடன் எலிசபெத் ராணியாருக்கு திருமணம் நடந்தபோது பர்மா நாட்டவர்கள் ராணியாருக்கு இந்த டியாரா மற்றும் நெக்லஸ் ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இதில் மொத்தம் 96 மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.

பர்மா நாட்டவர்களின் நம்பிக்கைப்படி இந்த 96 மாணிக்க கற்களால் ஆன நகைகளை அணிந்துகொள்பவர்கள் தீய சக்திகளிடம் இருந்தும் கொள்ளை நோய்களிடம் இருந்தும் பாதுகாக்கப்படுவார்கள் என்பதே.

மனிதர்களை தாக்கும் 96 நோய்களிடம் இருந்தும் இது காப்பாற்றும் என பர்மா நாட்டவர்கள் நம்புகின்றனர்.

டிரம்புடன் நடந்த விருந்தில் அந்த 96 மாணிக்க கற்களான டியாரா மற்றும் நெக்லஸ் அணிந்து ராணியார் கலந்துகொண்டது தொடர்பில் இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்