மனைவியின் கண்முன் உயிருக்கு போராடிய பிரித்தானியர்: வைரலாகும் வீடியோ

Report Print Vijay Amburore in பிரித்தானியா

கிரீஸ் நாட்டில் சுற்றுலா மேற்கொண்ட பிரித்தானியர் திடீரென உயிருக்கு போராடுவதும், அவரை ஹோட்டல் பணியாளர் காப்பாற்றும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கிரீஸ் நாட்டிற்கு சுற்றுலா மேற்கொண்ட பிரித்தானியாவை சேர்ந்த ஒரு தம்பதி, சில தினங்களுக்கு முன்பாக ஹோட்டல் ஒன்றில் இரவு உணவருந்தி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது திடீரென ஆணின் தொண்டை பகுதியில் மாமிசம் சிக்கிக்கொண்டுள்ளது. இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிரமப்பட ஆரம்பித்துள்ளார்.

அவரை காப்பாற்றுவதற்கு சரியான வழி தெரியாமல் மனைவி போராடியுள்ளார். இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த மற்ற சுற்றுலாப்பயணிகள், அதிர்ச்சியில் உதவிகூட செய்யாமல் உறைந்துபோய் இருந்தனர்.

இதற்கிடையில் ஹோட்டலில் பணிபுரியும் assilis Patelakis என்கிற ஊழியர், வேகமாக ஓடி வந்து முதலுதவி கொடுத்து அவருடைய உயிரை காப்பாற்றியுள்ளார்.

assilis Patelakis-வின் இத்தகைய செயலை பலரும் பாராட்டி இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து இணையதளத்திற்கு பேட்டியளித்துள்ள ஹோட்டல் பணியாளர் assilis Patelakis, ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு நான் பரிமாறியுள்ளேன். ஆனால் இதுபோன்ற சம்பவத்தை சமாளித்தது எனக்கு இதுதான் முதன்முறை என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers