8 பிஞ்சு குழந்தைகள் மர்மமான முறையில் கொலை.. பிரித்தானியாவை அதிர வைத்த வழக்கில் திடீர் திருப்பம்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் 8 பிஞ்சு குழந்தைகள் கொன்ற குற்றச்சாட்டின் தொடர்பில் மருத்துவமனை செவிலியர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

செஸ்டர் மருத்துவமனையிலே தொடர்ந்து மர்மமான முறையில் 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக, இரண்டு ஆண்டுகள் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார், கடந்த 2018ம் ஆண்டு மருத்துவமனை செவிலியர் லூசி லெட்வியை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு செவிலியர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், 8 பிஞ்சு குழந்தைகள் கொலை, 9 குழந்தைகளை கொல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில் மீண்டும் லூசி லெட்வி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பொலிஸ் அதிகாரி பால் ஹியூக்ஸ் கூறியதாவது, செஸ்டர் மருத்துவமனையில் மர்மமான முறையில் இறந்த 8 குழந்தைகள் மற்றும் 6 குழந்தைகள் கொல்ல முயன்ற குற்றசச்சாட்டின் தொடரில் கடந்த 2018ம் ஆண்டு யூலை மாதம் அந்த மருத்தவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் லூசி லெட்வி கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடந்த விசாரணைக்கு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், மேலும், 3 குழந்தைகளை கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் லூசி லெட்வி கைது செய்யப்பட்டு அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது என பொலிஸ் அதிகாரி பால் ஹியூக்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்