காதலியின் பெற்றோரிடம் காதல் குறித்து பேச வந்த காதலர்: வசமாக சிக்க வைத்த இளம்பெண்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தன்னை 14 வயதிலிருந்தே ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவர், பின்னர் தங்கள் காதல் குறித்து அந்த பெண்ணின் பெற்றோரிடம் பேச வந்தபோது உண்மையை போட்டு உடைத்து அவரை வசமாக சிக்க வைத்தார் அந்த இளம்பெண்.

Stockportஐச் சேர்ந்த Gareth Hughes, தனக்கு 36 வயதிருக்கும்போது தன் வயதை மறைத்து, காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் சமூக ஊடகம் ஒன்றில் ஒரு இளம்பெண்ணை சந்தித்திருக்கிறார்.

அந்த பெண் முதலில் தனக்கு 16 வயது என்று கூறினாலும் பின்னர் தனக்கு 14 வயதுதான் ஆகிறது என்று உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

வாரத்தில் மூன்று நாட்கள் அந்த பெண் படிக்கும் பள்ளிக்கே சென்று அவளை அழைத்து வரும் Gareth அவருடன் பாலுறவு கொண்டிருக்கிறார்.

அதை வீடியோவாக எடுத்ததோடு, அந்த பெண்ணை நிர்வாணமாக புகைப்படங்களும் எடுத்திருக்கிறார்.

இந்த உறவு நான்காண்டுகள் தொடர்ந்த நிலையில் தாங்கள் செய்வது தவறு என்று அந்த பெண்ணுக்கு தோன்றியிருக்கிறது.

அதே நேரத்தில் இன்னொரு பெண்ணுடனும் தொடர்பிலிருந்த Garethஆல் அந்த பெண் கர்ப்பமாகியிருக்கிறார்.

தான் நடந்த பிரச்சினைகளை சரி செய்ய விரும்புவதாகவும், ஆனாலும் தங்கள் உறவு தொடர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் Gareth.

தங்களுக்கிடையே உள்ள உறவு குறித்து தனது பெற்றோர்களிடம் அந்த பெண் பேச, Garethஐ வீட்டுக்கு வரவழைத்து பேச முடிவு செய்திருக்கிறார்கள் அவர்கள்.

தங்கள் காதல் குறித்து பேசலாம் என்று எண்ணிக்கொண்டு Gareth அந்த பெண்ணின் வீட்டுக்கு வர, அங்கேயே வைத்து அவர் தன்னுடன் தான் 14 வயதாக இருக்கும்போதே பாலுறவு கொண்ட விடயத்தை போட்டு உடைத்திருகிறார் அந்த பெண்.

பொலிசார் Garethஐ கைது செய்து, பின்னர் ஜாமீனில் விட அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் லண்டனில் வைத்து அவரை கைது செய்துள்ளனர் பொலிசார்.

அவருக்கு ஆறு ஆண்டுகள் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்