இளவரசி டயானா விட்டுச் சென்ற ஆபத்தான பணி: அங்கு குட்டி இளவரசர் ஆர்ச்சியுடன் செல்லவுள்ள இளவரசர் ஹரி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவசர் ஹரி, தனது மனைவி மேகன், தனது மகன், குட்டி இளவரசர் ஆர்ச்சியுடன் தனது தாய் டயானா விட்டுச் சென்ற ஆபத்தான ஒரு பணியை முடிப்பதற்காக ஆப்பிரிக்க நாடுகளுக்கு புறப்படுகிறார்.

ஆப்பிரிக்க நாடு ஒன்றில் கண்ணி வெடிகள் நிறைந்த நிலப்பரப்பில் இளவரசி டயானா பாதுகாப்பு உடை அணிந்து நடந்து செல்லும் புகைப்படம் மிகவும் புகழ் பெற்றது.

கண்ணி வெடிகள் எவ்வளவு ஆபத்தானவை என்று காட்டுவதற்காக சர்வதேச ஊடகவியலாளர்கள் முன் கண்ணி வெடி ஒன்றை டயானா வெடிக்கச் செய்து காட்டி உலகின் கவனம் ஈர்த்தார்.

கண்ணிவெடிகளை அகற்றும் நோக்கில் HALO Trust என்னும் தொண்டு நிறுவனம் ஒன்றையும் உருவாக்கி பணியாற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் அவர் கார் விபத்தொன்றில் உயிரிழந்தார்.

தற்போது தனது தாய் விட்டுச் சென்ற அந்த தொண்டு நிறுவனத்தின் பணிகளை தொடர்வதற்காக ஆப்பிரிக்க நாடுகளுக்கு புறப்பட இருக்கிறார் ஹரி.

தனது மனைவி மேகன், மகன் குட்டி இளவரசர் ஆர்ச்சி ஆகியோரையும் அவர் தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்துள்ள நிலையில், இந்த பயணம் குட்டி இளவரசருக்கும் இப்போதுதான் குழந்தை பெற்றுள்ள மேகனுக்கும் பாதுகாப்பானதுதானா என்பதை பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் ஆராய தொடங்கியுள்ளது.

ஹரி ஏற்கனவே 2013ஆம் ஆண்டு கண்ணி வெடிகளின் தாக்கம் குறித்து அறிவதற்காக ஆப்பிரிக்காவுக்கு, குறிப்பாக அங்கோலாவுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers