பிரித்தானியாவில் முன்னாள் கால்பந்து பயிற்சியாளர் தனது 25 ஆண்டு கால பணியின் போது பல இளம் வீரர்களை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சவுத்தாம்ப்டன் எப்.சி கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரான பாப் ஹிக்கின்ஸே இக்குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
சவுத்தாம்ப்டன் அணியின் முன்னாள் பயிற்சியாளரான பாப், தனது 25 வருட பணியின் போது பல நூறு இளம் வீரர்களுடன் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், பாப்-க்கு எதிராக 24 இளம் கால்பந்து வீரர்கள் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
இந்த விழக்கின் விசாரணையின் போது பாப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வீரர்களை துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும், வீரர்களுக்கு ஜெர்சி, பரிசு பொருட்கள் அளித்து தவறு செய்துள்ளார்.
பின்னர், கால்பந்து தொடருக்காக வீரர்களை வெளியூர்களுக்கு அழைத்து சென்றும், தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றும் தவறில் ஈடுப்பட்டுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 46 வழக்குகளில் பாப் ஹக்கின்ஸை குற்றவாளி என கண்டறிந்துள்ளது. இதனையடுத்து, 66 வயதான பாப் ஹிக்கின்ஸிக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.