பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? முதல் சுற்று வாக்கெடுப்பு முடிவு வெளியானது

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பின் முதல் சுற்று முடிவு வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் பிரதமர் பதவியிலிருந்து கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் தெரசா மே விலகியதை தொடர்ந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் 10 வேட்பாளர்கள் குதித்துள்ளனர்.

இந்நிலையில்,அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க இன்று பிரித்தானியா நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்குப்பதிவு நடைப்பெற்றது.

முதல் சுற்று முடிவில் போரிஸ் ஜான்சன் 114 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து ஜெர்மி ஹன்ட் 43 வாக்குகளும், மைக்கேல் கோவ் 37 வாக்குகளும் பெற்றுள்ளனர். போரிஸ் ஜான்சனுக்கு அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசி மூன்று இடங்களை பிடித்த மார்க் ஹார்பர், ஆண்ட்ரியா லட்ஸம் மற்றும் எஸ்தர் மெக்வீ போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

7 வேட்பாளர்கள் பங்கேற்கும் அடுத்த சுற்று வாக்கெடுப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கும் இறுதி வாக்கெடுப்பு இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதில், முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுவார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்