வெறும் 300 ரூபாய் செலவு செய்தவருக்கு கோடிக்கணக்கில் கிடைத்த பணம்... எப்படி தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த இளைஞர் ஓன்லைன் சீட்டாட்டத்தில் $5 கொடுத்து கலந்து கொண்ட நிலையில் $1 மில்லியன் பரிசை வென்றுள்ளார்.

ஜேம்ஸ் கர்மைக்கேல் என்ற இளைஞர் சமீபத்தில் ஓன்லைனில் சீட்டாட்டம் விளையாடும் போட்டியில் கலந்து கொண்டார்.

இதில் பங்கேற்க $5 பணத்தை ஜேம்ஸ் கட்டினார்.

ஒரு கட்டத்தில் ஜேம்ஸ், பெரு மற்றும் மெக்சிகோவை சேர்ந்த இரண்டு நபர்களுடன் விளையாடிய நிலையில் பெருவை சேர்ந்த நபர் போட்டியில் தோற்று வெளியேறினார்.

இதன்பின்னர் ஜேம்ஸுக்கும், மெக்சிகோவை சேர்ந்த நபருக்கும் போட்டி கடுமையானது.

இதில் திறமையாக விளையாடி முதல் பரிசான $1 மில்லியனை ஜேம்ஸ் வென்று அசத்தினார்.

ஜேம்ஸ் பரிசை வென்ற தகவலை அறிந்த அவர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பரிசு பணத்தை வைத்து ஜேம்ஸ் முதலீடு செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.

சீட்டாட்டத்தில் பெரும்பாலானோர் தோல்வியை சந்திக்கும் நிலையில் ஜேம்ஸ் இவ்வளவு பெரிய தொகையை வென்று அசத்தியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers