எபோலா நோயிலிருந்து தப்பிய பிரித்தானிய நர்ஸ்: இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த Pauline Cafferkey (43), மோசமான எபோலா வைரஸ் நோய்த்தொற்றுக்கு தப்பியவர்.

அவருக்கு தற்போது இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்துள்ள அவரது கணவர், அந்த குழந்தைகளின் படத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். Glasgowவில் செவ்வாயன்று பிறந்த அந்த இரட்டைக் குழந்தைகளுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

Pauline எபோலா நோய்த்தொற்று தாக்கிய மேற்கு ஆப்பிரிக்க நாடான Sierra Leoneக்கு தன்னார்வலராக சென்றிருந்தார்.

2014ஆம் ஆண்டு Sierra Leoneஇல் 4,000 பேர் எபோலா வைரஸ் தொற்றுக்கு பலியானார்கள்.

அப்போது பிரித்தானியாவுக்கு திரும்பிய Paulineக்கும் எபோலா வைரஸ் தொற்று பாதித்தது.

அவர் பின்னர் குணமானாலும் மீண்டும் ஒருமுறை நோய்வாய்ப்பட்டதோடு, அவருக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டதால், அவரது மூட்டுக்கள் பாதிக்கப்பட்டு நடக்க கஷடப்பட்டதோடு வேறு பல பிரச்சினைகளும் உருவாகின.

இந்நிலையில், தனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள Pauline, இது எபோலா நோய்த்தொற்றியவர்களுக்கும் ஒரு எதிர் காலம் உள்ளது என்பதற்கு ஆதாரம் என்றார்.

2014இல் நான் நோய்வாய்ப்பட்டதிலிருந்து, இந்த வாரம் இரட்டைக்குழந்தைகளை பெற்றெடுப்பது வரை எனக்கு உதவிய மருத்துவப் பணியாளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers