கார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற இளவரசர் எட்வர்ட்: வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மாணவி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய ராணியின் உறவினரும், இளவரசருமான எட்வர்ட் சென்ற கார் விபத்து ஏற்படுத்தியதில் கல்லூரி மாணவி ஒருவர் லேசான காயங்களுடன் தப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சசெக்ஸ் பகுதியில் உள்ள கல்லூரியில் நரம்பியல் துறை பயின்று வருபவர் ஒலிவியா ஃபெலோஸ் (21). இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அதிர்ச்சியளிக்கும் பேட்டி கொடுத்துள்ளார்.

பிரைட்டன் பகுதி அருகே தன்னுடைய காரில் 60கிமீ வேகத்தில் ஒலிவியா சென்றுகொண்டிருந்த போது, திடிரென இடப்பக்கத்தில் இருந்து ஒரு ஜாகுவார் அதிவேகத்தில் முன்னேறியுள்ளது.

பின்னர் வேகத்தை குறைத்துக்கொண்டு மீண்டும் அதிகரித்து சாலையின் குறுக்கே கடக்க முயன்றுள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படவிருப்பதை அறிந்த ஒலிவியா, உடனடியாக ஹேண்ட் பிரேக் போட்டுள்ளார். இதில் நிலைகுலைந்த அவருடைய கார், மத்தியப்பகுதியில் மோதி சிதைந்துள்ளது.

அப்பகுதி வழியாக கடந்து சென்ற இரு பெண்கள், இதனை பார்த்ததும் வேகமாக ஓடிவந்து காரினுள் சிக்கியிருந்த ஒலிவியாவை பத்திரமாக வெளியில் மீட்டனர்.

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விபத்து ஏற்படுத்திய கார் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, அந்த காரின் பதிவெண்ணை இரு பெண்கள் கூறியுள்ளார்.

அதனை பரிசோதித்த போது அரண்மனையை சேர்ந்தது என்பது தெரியவந்தது என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து பத்திரிக்கை நிறுவனம் அரண்மனையை தொடர்பு கொண்டபொழுது, ஜூன் 2ம் திகதியன்று இளவரசர் எட்வர்ட் சென்ற கார் விபத்தில் சிக்கியதாக கூறியுள்ளனர். மேலும் விபத்து குறித்து ஆவணங்களை பொலிஸாரிடம் சமர்பித்திருப்பதாகவும் விளக்கம் கொடுத்துள்ளனர்.

இதனை உறுதி செய்துள்ள பொலிஸார், இளவரசர் எட்வர்ட் விசாரணையை எதிர்கொள்ளவிருப்பதாக கூறியுள்ளனர்.

முன்னதாக இளவரசர் பிலிப் கடந்த ஜனவரி 18ம் திகதியன்று விபத்து ஏற்படுத்தியதால், பெண் ஒருவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers