பேரழிவு தரும் விளைவுகளை ஈரான் சந்திக்கும்: பிரித்தானிய வெளியுறவு செயலாளர் எச்சரிக்கை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஈரான் இரண்டு எண்ணெய் கப்பல்களை தாக்கி, போர் அச்சுறுத்தலை எழுப்பிய பின்னர், அதன் எதிரொலியாக, பிரித்தானிய கப்பல்களை பாதுகாக்க 100 சிறந்த கடற்படையினரை அந்நாட்டு அரசாங்கம் வளைகுடாவிற்கு அனுப்பியுள்ளது.

கடந்த வியாழக்கிழமையன்று ஓமன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த நார்வே மற்றும் சிங்கப்பூருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்ட அமெரிக்கா, தாக்குதலுக்கு ஈரான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என குற்றம் சாட்டியது.

இதற்கு பிரித்தானிய அரசும் ஆதரவு தெரிவித்தது. இதுகுறித்து பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட் கூறுகையில், "வியாழக்கிழமை நடந்த இரட்டை தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான் இருப்பது நிரூபிக்கப்பட்டால் 'எதிர்பாராத ஆனால் பேரழிவு தரும்' விளைவுகள் இருக்கும்" என்று எச்சரித்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியிட்ட ஆதாரம் போதுமானதாக இல்லை என்று ஜேர்மனி கருத்து தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வளைகுடா பகுதியில் இருக்கும் பிரித்தானிய கப்பல்களை பாதுகாக்க 100 சிறந்த கப்பற்படை வீரர்களை அந்நாட்டு அரசு அனுப்பியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்