தந்தையர் தினத்தில் ஹரி - மேகன் தம்பதி வெளியிட்ட அற்புதமான புகைப்படம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

தந்தையர் தினத்தில் நன்றி தெரிவிக்கும் விதமாக இளவரசர் ஹரி - மேகன் தம்பதி வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையர் தினமானது நேற்று உலகம் முழுவதிலுமுள்ள மக்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

அதனை கொண்டாடும் விதமாக இளவரசர் ஹரி மற்றும் அவருடைய மனைவி மேகன், தங்களுடைய மகனின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த படத்தில் இளவரசர் ஹரியின் கைவிரலை, ஆர்ச்சி பற்றிக்கொண்டிருப்பதை போல உள்ளது. இதனை பார்த்த இணையதளவாசிகள் பலரும் உற்சாகத்துடன் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அதோடு மட்டுமில்லாமல் குட்டி இளவரசருக்கு அடுத்த மாதம் பெயர் சூட்டும் விழா நடைபெற உள்ளது. ஹரி - மேகன் திருமணம் செய்துகொண்ட செயின்ட் ஜார்ஜ் ஆலயத்தில் தான் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

ஆனால் இதில் ராணி கலந்துகொள்ளமாட்டார் எனது தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers