உணவின்றி தவிக்கும் கோடி கணக்கான மக்கள்.. கருணை நிறைந்த பிரித்தானியா செய்த செயல்

Report Print Basu in பிரித்தானியா

தெற்காசியா நாடான ஆப்கானிஸ்தானில் கோடி கணக்கான மக்கள் உணவு, தண்ணீர், மருத்துவ வசதி இல்லாமல் தவித்து வரும் நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உதவ பிரித்தானியா முன்வந்தள்ளது.

எதிர்வரும் ஐந்து வருடங்கள் ஆப்கான் மக்களின் அடிப்பைட தேவைகளான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிக்காக பிரித்தானியா புதிதாக 170 மில்லியன் பவுண்டு அளிப்பதாக அறிவித்துள்ளது.

லண்டனில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷரப் கானியை சந்தித்த பின்னர் பேட்டியளித்த சர்வதேச அபிவிருத்தி செயலாளர் ரோரி ஸ்டீவர்ட் கூறியதாவது, ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான தேவை கடுமையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மோதல்கள் மற்றும் கடும் வறட்சி காரணமாக ஆப்கானிஸ்தானில் பல மில்லியன் மக்கள் பசி மற்றும் மருத்துவ உதவி தேவையால் அவதிப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி உட்பட அடிப்படை தேவைகளை வழங்கி உதவி செய்ய பிரித்தானியா முன்வந்துள்ளது.

13.5 மில்லியன் ஆப்கானியர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதால், அவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் போதுமான உணவு இருப்பததை உறுதிப்படுத்த வேண்டும் என பிரித்தானியா அபிவிருத்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers