பிரித்தானியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடந்த காத்திருக்கும் 1000 ஐஎஸ் பயங்கரவாதிகள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

சிரியாவில் 'கலிபேட்' வீழ்ச்சிக்கு பழிவாங்கும் விதமாக ஆயிரம் ஐஎஸ் ஸ்லீப்பர் செல்கள் சேர்ந்து, பிரித்தானியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தலாம் என குர்திஷ் தளபதி எச்சரித்துள்ளார்.

சிரிய ஜனநாயகப் படைகளின் தளபதியான மெர்வன் கமிஷ்லோ ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தோற்கடிக்கப்பட்ட கலிபாவின் உறுப்பினர்கள் சிரியாவில் தலைமறைவாக இருந்து வந்தனர்.

அவர்கள் தற்போது 'கலிபேட்' வீழ்ச்சிக்கு பழிவாங்கும் விதத்தில், பிரித்தானியா போன்ற நாடுகளில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேற்கத்திய ஆதரவுடைய குர்திஷ் படைகள் இஸ்லாமிய அரசுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தி வருகின்றன. தற்போது சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தினால், கிட்டத்தட்ட எல்லா பிராந்தியங்களையும் இஸ்லாமிய அரசு இழந்துள்ளது.

இராணுவா ரீதியில் வெற்றியடைந்த போது, ஆயிரக்கணக்கான ஸ்லீப்பர் செல்கள் அங்கிருந்து காணாமல் போனார்கள்.

அவர்கள் அனைவரும் தற்போது ரக்கா போன்ற வடகிழக்கு சிரியாவின் பகுதிகளில் குவிந்திருக்கின்றனர். இந்த இடம் முன்னர் இஸ்லாமிய அரசின் கோட்டையாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

அப்போது மறைந்திருக்கும் ஸ்லீப்பர் செல்கள் பிரித்தானியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், நிச்சயமாக நூறு சதவீதம் அவர்கள் தாக்குதல் நடத்தலாம். அவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்களுக்கென கட்டளை பிறப்பிப்பதற்கு ஒரு அமைப்பு உள்ளது

பாக்தாதி இராணுவத்தில் உள்ளவர்கள் பலரும் படித்த புத்திசாலிகள். அவர்களுடைய தளபதிகள் அனைவருமே புத்திசாலித்தனமான மனநிலை கொண்டவர்கள் எனக்கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்