பிரித்தானியாவில் தேனிலவின்போது மணமகனுக்கு நேர்ந்த பரிதாபம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் திருமணமான அதே இரவில், ஒரு மணமகன் படிக்கட்டின் கைப்பிடிச் சுவர் உடைந்து கீழே விழுந்ததில், கோமா நிலைக்கு சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஸ்காட்லாந்தின் மேற்கு Lothianஇல் தனது ஆசைக் காதலி Avrilஐ திருமணம் செய்து கொண்ட Chris Mallon, திருமணத்திற்கு வந்த பரிசுப்பொருட்களை தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலின் மாடியிலிருக்கும் அறைக்கு தூக்கிச் சென்றிருக்கிறார்.

படிக்கட்டின் உச்சிக்கு சென்றபோது, Mallonஇன் கால் தவற, அருகிலுள்ள கைப்பிடியைப் பிடித்திருக்கிறார் அவர். அந்த கட்டிடம் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. எதிர்பாராமல் அந்த பழைய கைப்பிடி திடீரென உடைய, சுமார் 12 அடி உயரத்திலிருந்து தலைகுப்புற விழுந்திருக்கிறார் Mallon.

பலத்த காயம் அடைந்த Mallon, உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Mallonக்கு மூளையில் பலத்த காயமும், முதுகுத்தண்டில் சேதமும் ஏற்பட்டுள்ளதோடு இதயத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மோசமான காயங்கள் காரணமாக மருத்துவர்கள் அவரை கோமா நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

முகநூலில், அருமையான திருமணத்தைத் தொடர்ந்து தனது கணவனுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை கண்ணீர் மல்க விவரித்துள்ள Avrilக்கு பலரும் தங்கள் ஆறுதலைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்