லண்டனில் வசித்த தமிழ் குடும்பம் சொந்த ஊருக்கு வந்து செய்த செயல்... குவியும் பாராட்டுகள்

Report Print Raju Raju in பிரித்தானியா

தமிழகத்தை சேர்ந்த தம்பதி லண்டனில் வசித்து வந்த நிலையில் மீண்டும் சொந்த ஊருக்கு வந்து தங்களது மகனை அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்துள்ள நிகழ்வு பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் நன்னாட்டை சேர்ந்த தம்பதி சிவப்பிரசாத் - சுபாஷினி அரசு பள்ளியில் படித்து, பின்னர் பொறியியல் பட்டம் பெற்றவர்கள்.

தம்பதிக்கு அன்புசெல்வன் என்ற மகன் உள்ளான்.

சிவப்பிரசாத்தும், சுபாஷினியும் லண்டனில் பணிபுரிந்து வந்த நிலையில் அன்புசெல்வனை அங்குள்ள பள்ளியில் படிக்க வைத்தார்கள்.

இந்நிலையில் அரசு பள்ளியில் பயின்றதாலோ என்னவோ அந்த அருமையை உணர்ந்த தம்பதி சொந்த ஊருக்கு வந்ததோடு அன்புசெல்வனை அரசு பள்ளியில் கல்வி பயில்வதற்காக சேர்த்துள்ளனர்.

இது குறித்து சுபாஷினி கூறுகையில், அன்புசெல்வனை நான் சேர்த்துள்ள அரசு பள்ளி மிக சிறப்பாக செயல்படுகிறது, என் மகனை அறிவில் சிறந்தவனாக ஆக்கும் என நம்புகிறேன்.

நான் லண்டனில் இருக்கும் போது ஏதேச்சியாக வாட்ஸ் அப் பதிவில் நன்னாடு அரசு பள்ளி குறித்து பார்த்தேன்.

அப்போதே அன்புசெல்வனை அங்கு கல்வி பயில வைக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

இந்த பள்ளியின் ஆசிரியர்களின் பணியும், பள்ளியை சுற்றியுள்ள சூழலும் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என கூறியுள்ளார்.

இந்த அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கல்வியை போதிப்பதோடு, அவர்களின் தனித்திறமையையும் ஊக்குவிக்கிறார்கள்.

மேலும் மாணவர்களின் ஆரோக்கியத்தை பேணி காக்க அவர்களுக்கு வாரம் ஒருமுறை மூலிகை கஞ்சி வழங்கப்படுகிறது.

இது குறித்து மாணவன் அன்புசெல்வன் கூறுகையில், நான் லண்டனில் இருந்து என் பெற்றோருடன் இங்கு வந்துள்ளேன்.

என் பெற்றோர் இந்தியாவுக்கு வந்து செட்டில் ஆகியுள்ளனர், இதோடு நான் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என என்னிடம் தெரிவித்தனர் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்