அமெரிக்காவில் அலுவலகம் திறக்கும் இளவரசர் ஹரி: சகோதர்களுக்கிடையே அதிகரிக்கும் விரிசல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கு இடையிலான விரிசல் அதிகமாகிக்கொண்டே செல்லும் நிலையில், இளவரசர் ஹரி, அமெரிக்காவில் ஒரு அலுவலகம் திறக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இளவரசி டயானா இருந்தால் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்று கூறும் விமர்சகர்கள், இளவரசர் ஹரி செய்வது தவறு என்பதை நிச்சயம் அவர் உணர்த்தியிருப்பார் என்கிறார்கள்.

16 மாதங்களுக்கு முன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் வில்லியம், அவரது கர்ப்பிணி மனைவி கேட், மற்றும் ஹரியுடன் அழகான மேகன் இணைந்து தங்கள் தொண்டு நிறுவனத்தை நடத்தப்போவதாக பகிர்ந்து கொண்டதைப் பார்க்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அந்த தொண்டு நிறுவனத்தில் இப்போது ஹரியும் மேகனும் இல்லை.

அவர்கள் பிரிந்து தங்களுக்கென்று தனியாக ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பிப்பதோடு தனது அலுவலகத்தை அமெரிக்காவில் ஆரம்பிக்க முடிவும் செய்துள்ளனர்.

இளவரசி டயானா இறந்தபின் எப்போதும் இணைந்தே காணப்பட்ட வில்லியமும் ஹரியும், பிறகு வில்லியமுக்கு திருமணம் ஆனபின்னும் எப்போதும் இணைந்தே காணப்பட்ட மூவரும் என, பலரும் வியந்து பார்த்த அந்த அழகான உறவின் மீது கண் பட்டதோ என்னவோ! மேகன் வந்ததும் எல்லாமே மாறிப்போனது.

இப்போது இரண்டு ஜோடிகளும் ஆளுக்கொரு பக்கம் வாழ்வதோடு, ஹரி மேகன் ஜோடி, ஏஞ்சலினா ஜோலி போன்ற மற்ற பிரபலங்கள் செய்வதுபோல் ஆப்பிரிக்காவுக்கு சென்று உலகைக் காக்கும் முயற்சியில் தங்கள் பங்கைச் செய்ய இருக்கிறது.

ஆனால் வெளிநாடுகளுக்கு ஹரியும் மேகனும் செல்வார்களானால், இந்த பிரபலம் என்னும் புகழ்ச்சி, உண்மையான ராஜ வாழ்க்கைக்கு சற்றும் இணையாகாது என்பதை நிச்சயம் வெகு விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்