லண்டனில் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட நபர்: உயிருக்கு போராடும் பரிதாபம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனில் சுரங்க ரயிலில் பயணம் செய்த ஒருவர், சக பயணியுடன் ஏற்பட்ட கைகலப்பின்போது தூக்கி வீசப்பட்டதையடுத்து ஏற்பட்ட காயங்கள் காரணமாக உயிருக்கு போராடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவருக்கு மார்பில் பலத்த அடிபட்டுள்ளதோடு, பல விலா எலும்புகள் உடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அவரது நிலைமை மோசமாக இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அது கத்திக் குத்து சம்பவம் இல்லை என்று தெரிவித்த பொலிசார், சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய போக்குவரத்து பொலிசார் ஒருவர் கூறும்போது, ரயிலில் பயணித்த இருவருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின்போது, ரயில் நிறுத்தத்தில் நிற்கும் நேரத்தில் அவர் தூக்கியெறியப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்