லொட்டரியில் பல கோடிகள் கிடைத்ததாக கூறியதை நம்பிய பெண்... அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் லொட்டரியில் பல கோடிகள் தனக்கு பரிசு விழுந்ததாக பொய் கூறி, பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத 44 வயதான பெண் தான் லட்சக்கணக்கான பணத்தை ஒருவரிடம் ஏமாந்துள்ளார்.

அவர் கூறுகையில், நான் பணி செய்யும் இடத்துக்கு ஒரு நபர் வந்தார். பின்னர் என்னிடம், தனது தாய்க்கு இதய அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும் தனக்கு £5,000 பணம் கடனாக வேண்டும் என கூறினார்.

மேலும் சமீபத்தில் தனக்கு யூரோ மில்லியன் லொட்டரியில் £123 மில்லியன் பரிசு விழுந்துள்ளதாகவும், அந்த பரிசு பணம் தன் கைக்கு விரைவில் வந்தவுடன் கடன் தொகையை விட அதிக பணமாக £500,000 கொடுப்பதாகவும் கூறினார்.

இதை நம்பி நானும் £5,000 பணம் கொடுத்தேன். பின்னர் அவர் சொன்ன இடத்துக்கு சில வாரங்கள் கழித்து சென்றேன்.

அப்போது அவர் அங்கு வரவில்லை, இதையடுத்தே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்.

அவன் கடவுளை பற்றி பேசினான், உலக மக்களை பற்றி பேசினான், தனக்கு எல்லாமே தெரியும் என்பதை போல பேசினான்.

என்னிடம் லொட்டரி சீட்டை கூட காட்டினான், இதோடு ஏமாற்றுபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் பேசினான்.

ஆனால் நான் தான் பெரிய முட்டாளாகிவிட்டேன் என கூறியுள்ளார்.

இதனிடையில் லொட்டரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற போலியான ஏமாற்று காரர்களிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், லொட்டரி டிக்கெட்கள் தேசிய லொட்டரியிடம் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்