DNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

DNA சோதனை மூலம் தனது தந்தையை தேடிக் கண்டுபிடித்த பெண், ஆசையாக அவரைப் பார்க்கச் சென்றபோது, அந்த நபர் அவரை ஏற்றுக் கொள்ளாததால் அவருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தான் தனது தந்தை என்று எண்ணிய நபர் தனது உண்மையான தந்தை அல்ல என்று தெரியவந்த நிலையில், பிரித்தானியாவைச் சேர்ந்த நான்கு குழந்தைகளின் தாயாகிய Nicki Field (50)க்கு தனது தந்தை யார் என்று அறியும் ஆசை ஏற்பட்டது.

தனது DNA மாதிரியை பயன்படுத்தி தனது தந்தை யார் என கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார் Nicki.

வெற்றிகரமாக தனது தந்தையைக் கண்டுபிடித்த Nicki, அவரை சந்திப்பதற்காக ஆசையுடன் சென்றுள்ளார்.

ஆனால் அந்த நபரோ, Nickiயை தனது மகள் என ஏற்றுக் கொள்ள மறுத்ததோடு, தனக்கு எந்த பெண்ணுடனும் தொடர்பு இருந்ததில்லை என்று கூறி அவரை அனுப்பி விட்டார்.

அவரது பிள்ளைகள் தனது முகச்சாடையிலேயே இருந்தபோதிலும், அவர்களும் தங்கள் வாழ்வில் Nickiக்கு இடமில்லை என்று கூறி அவரை துரத்தி விட்டனர்.

மனம் சோர்ந்துபோன Nicki, DNA சோதனைகளில் இப்படி ஒரு எதிர்மறையான பக்கமும் உள்ளது எனக்கூறி மற்றவர்களை எச்சரித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers