லண்டனில் வெளியிடப்பட்ட செல்வாக்கான பெண்களின் பட்டியலில் இடம்பிடித்த தமிழ்பெண்! யார் அவர்?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியா - இந்தியா இடையேயான உறவில் செல்வாக்கு செலுத்திய 100 பேரில் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இடம் பெற்றுள்ளார்.

பிரித்தானியா - இந்தியா இடையிலான உறவை மேம்படுத்தும் விதமாக ஜூன் மாத இறுதியில் பிரித்தானிய இந்தியா வாரம் கடைபிடிக்கப்படும்.

இதை முன்னிட்டு, இருநாடுகள் இடையே உறவு மேம்பட உதவியவர்கள் கெளரவிக்கப்படுவார்கள்

அந்த வகையில், பிரித்தானியா - இந்தியா இடையே நல்லுறவை ஊக்குவிக்க செல்வாக்கு செலுத்திய 100 பெண்களின் பட்டியலை, அந்நாட்டு உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் லண்டனில் வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் இடம் பிடித்துள்ளார்.

லண்டனில் பொருளாதாரம் பயின்று அங்கேயே பணிபுரிந்த நிர்மலா சீத்தாராமன் பிரித்தானியாவுக்கு மிகவும் பழக்கமானவர் என்று அந்தப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers