பிரித்தானியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: வெடி குண்டு அச்சுறுத்தல்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இந்தியாவிலிருந்து அமெரிக்கா புறப்பட்ட விமானம் ஒன்று அவசரமாக பிரித்தானியாவில் தரையிறக்கப்பட்டுள்ள நிலையில் வெடிகுண்டு அச்சுறுத்தல் உள்ளதா என பொலிசார் விசரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையிலிருந்து அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்றில் வெடி குண்டு அச்சுறுத்தல் ஏற்பட்டதையடுத்து அது அவசரமாக பிரித்தானியாவிலுள்ள Stansted விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த போயிங் 777 வகை விமானத்தை இரண்டு பிரித்தானிய போர் விமானங்கள் பாதுகாப்பாக லண்டனுக்கு வழி நடத்திச் சென்றன.

பிரித்தானிய விமானப்படையும், ஏர் இந்தியாவும் நடந்த சம்பவம் உண்மைதான் என்பதை ட்விட்டரில் உறுதி செய்துள்ளன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து Stansted விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதையடுத்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்துக்காக விமான நிலையம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

Essex பொலிசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விமானத்தில் எத்தனை பயணிகள் இருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில் மின்னல் வேகத்தில் விமானப்படையின் போர் விமானங்கள் பாய்ந்து சென்றதால் Derbyshire பகுதியில் பலத்த வெடிச்சத்தம் போல் கேட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்