தமது பிள்ளைகளில் ஒருவர் ஓரினசேர்க்கையாளராக இருந்தால்? இளவரசர் வில்லியம் அளித்த நெகிழ்ச்சி பதில்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

தமது பிள்ளைகளில் ஒருவர் ஓரினசேர்க்கையாளராக அறியப்பட்டால் அதை கண்டிப்பாக தாம் ஏற்றுக் கொள்வேன் எனவும், அதில் கிஞ்சித்தும் சந்தேகம் வேண்டாம் எனவும் பிரித்தானிய இளவரசர் வில்லியம் பதிலளித்துள்ளார்.

இருப்பினும், அவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது திணிக்கப்படும் கூடுதல் துன்புறுத்தல் குறித்தே தாம் வருத்தப்படுவதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் எதிர்கால அரசரும், இதனால் பிரித்தானியாவில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் தலைவராக பொறுப்பேற்க இருப்பவருமான இளவரசர் வில்லியத்திற்கு ஜோர்ஜ்(5), சார்லோட்(4) மற்றும் லூயிஸ்(2) என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

சமீபத்தில் ஓரினசேர்க்கையாளர்களுக்கு ஆதரவாகவும், வீடற்றவர்களின் நல்வாழ்வுக்காக முன்னெடுக்கப்படும் தொண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளவரசர் வில்லியம், மேற்கூறிய கருத்தை பதிவு செய்துள்ளார்.

தமது பிள்ளைகளில் ஒருவர் ஓரினசேர்க்கையாளராக அறியப்பட்டால், அதனால் தமக்கு எவ்வித பதட்டமும் இல்லை எனவும்,

ஆனால் இதனால் சமூகத்தில் இருந்து அவர்களுக்கு அளிக்கப்படும் அழுத்தம், அல்லது அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் அழுத்தம் தொடர்பிலேயே தாம் வருத்தப்படுவதாகவும்,

அவர்களின் எதிர்காலம் எத்துணை கடினமாக அமையும் என்பதிலேயே தமது எண்ணமெல்லம் இருக்கும் என பதிலளித்துள்ளார்.

மேலும், தாம் ஒரு தந்தையான பின்னர் இவாறான ஒரு எண்ண ஓட்டம் தமக்குள் இருந்தது எனவும் இளவரசர் வில்லியம் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

சமூகத்தைவிடவும் தமது குடும்ப அந்தஸ்தே அதற்கு தடையாக இருக்கலாம் என பதிலளித்த வில்லியம், இருப்பினும் தமது முழு ஆதரவும் அவர்களுக்கு உண்டு என அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...