முன்னாள் பிரித்தானிய அழகிக்கு சிக்கல்: தீவிரவாத அமைப்புக்கு உதவியதாக வழக்கு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய அழகிப்போட்டி ஒன்றில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் மீது தீவிரவாத அமைப்பு ஒன்றிற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரபல கால்பந்தாட்ட வீரர் ஒருவரின் முன்னாள் காதலியும் வளர்ந்து வரும் நடிகையுமான Amaani Noor (21), 'The Merciful Hands' என்னும் அமைப்பிற்கு பணம் அனுப்பியுள்ளார்.

தீவிரவாத அமைப்பு ஒன்றிற்கு நிதியுதவி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இரண்டு வாரங்கள் வழக்கு விசாரணையை அவர் எதிர்கொள்ள இருக்கிறார்.

நீதிமன்றத்திற்கு Amaaniயுடன், மற்றொரு குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரான Victoria Webster (28) என்பவரும் வந்திருந்தார்.

அவரது தூண்டுதலின் பேரிலேயே Amaani, அந்த அமைப்பிற்கு 35.92 பவுண்டுகள் நிதி வழங்கியுள்ளார். அதை Webster ஒப்புக்கொண்டும் உள்ளார்.

தான் கொடுக்கும் பணம் தீவிரவாதத்திற்கு உதவுவதை அறிந்தே Amaani நிதியுதவி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்