நான்கு பேரை திருமணம் செய்த பிரித்தானிய பெண்.. மீண்டும் ஒருவரை மணக்க திட்டம்.. யார் அவர்?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த பெண், பல்வேறு காலக்கட்டத்தில் நான்கு பேரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்த நிலையில் தற்போது ஐந்தாவதாக ஒருவரை மணக்கவுள்ளார்.

சாரா பிரட் என்ற பெண்ணுக்கு தற்போது 51 வயதாகிறது. அவர் தனது திருமணம் மற்றும் விவாகரத்துக்காக மட்டும் இதுவரை £37k பணத்தை செலவு செய்துள்ளார் என்றால் நம்பமுடிகிறதா?

ஆம், ஏனெனில் இவர் இதுவரை நான்கு பேரை மணந்து அவர்களை விவாகரத்து செய்துள்ளார்.

இது குறித்து சாரா கூறுகையில், நான் திருமணம் செய்து கொள்வதற்கும், விவாகரத்து செய்வதற்கும் அடிமையாகிவிட்டதாக பலரும் சொல்கிறார்கள்.

ஆனால் நான் ஒவ்வொரு திருமணத்தின் போது அந்த மண வாழ்க்கை இறுதி வரை நீடிக்க வேண்டும் என நினைப்பேன், ஆனால் அது அப்படி நடக்காது என கூறுகிறார்.

சாராவுக்கு 18 வயது இருக்கும் போது கடந்த 1985-ல் நிக் என்பவரை முதலில் மணந்தார்.

தம்பதிக்கு 1986-ல் டேனியல் என்ற மகன் பிறந்தார். பின்னர் 1989-ல் கருத்துவேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

பின்னர் 1990-ல் பவுல் என்பவரை சந்தித்து அவருடன் நட்பான சாரா டேட்டிங் சென்ற நிலையில் மீண்டும் கர்ப்பமாகி ஜோ என்ற பெண் குழந்தையை பெற்றார்.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் 1993-ல் விவாகரத்து பெற்றனர்.

இதன்பிறகு மூன்று வருடங்கள் குழந்தைகளை நன்றாக கவனித்து வந்த சாராவுக்கு தன்னை விட 10 வயது அதிகமான டாக்சி ஓட்டுனருடன் காதல் ஏற்பட்டு அவரை மணந்தார்.

அவரை கடந்த 2006-ல் சாரா பிரிந்த நிலையில் அதே வருடத்தில் ஓன்லைன் மூலம் சீன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

இது காதலாக மாற இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சாராவுக்கு இந்த திருமணம் 10 ஆண்டுகள் நீடித்த நிலையில் 2016-ல் இந்த தம்பதி விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆஸ்லே என்ற 55 வயதான நபரை டேட்டிங் இணையதளம் மூலம் சந்தித்தார் சாரா.

இருவரும் தற்போது காதலித்து வரும் நிலையில் அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்