கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட கர்ப்பிணி: குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனில் எட்டு மாத கர்ப்பிணி ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.

லண்டனின் Croydonஇல் வசித்து வந்த கர்ப்பிணியான Kelly Mary Fauvrelle (26), சனிக்கிழமை காலை கத்தியால் குத்தப்பட்டதாக கிடைத்த தகவலின்பேரில் பொலிசார் அங்கு விரைந்தனர்.

ஆனால் பொலிசார் Kellyயின் வீட்டுக்கு சென்று பார்க்கும்போது அவர் உயிரிழந்திருந்தார்.

Kelly எட்டு மாத கர்ப்பிணியாக இருந்ததால், பொலிசார் உடனடியாக அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அங்கு குழந்தையை அவசர அறுவை சிகிச்சை ஒன்றின் மூலம் வெளியே எடுத்தனர் மருத்துவர்கள்.

பின்னர் குழந்தை தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை, சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் Kelly கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கேக் ஒன்றில் ’See you soon Riley’ என்று எழுதப்பட்ட கேக் ஒன்றுடன், தனது கருவில் இருப்பது ஆண் குழந்தை என்பதைக் காட்டும் நீல நிற பலூனுடன் Kelly அமர்ந்துள்ளார்.

அதிலிருந்து குழந்தையின் பெயர் Riley என்பதை அறிந்து கொண்ட உறவினர்கள், Rileyக்காக கண்ணீர் வடிக்கின்றனர்.

இதற்கிடையில், பொலிசார் CCTV கெமராவில் பதிவாகியுள்ள காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த காட்சிகளில் Kellyயின் வீடு இருக்கும் திசையை நோக்கிச் செல்லும் ஒரு நபர், பின் சிறிது நேரத்திற்கு பிறகு எதிர் திசையில் ஓடுவது பதிவாகியுள்ளது.

அவர் சிக்கினால் ஏதேனும் தடயம் கிடைக்கலாம் என்பதால், அந்த காட்சிகளை வெளியிட்டுள்ள பொலிசார், அதிலிருக்கும் நபர் குறித்து யாருக்காவது தெரிந்தால், தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...