மகன் தனக்கு பிறந்தவனல்ல: செலவிட்ட மொத்த பணத்தையும் திருப்பி கேட்கும் பிரித்தானிய தந்தை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் கணவர் ஒருவர் தமது 8 வயது மகனுக்காக செலவிட்ட மொத்த பணத்தையும் திருப்பி கேட்டு மனைவி மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

லண்டன் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தமது முன்னாள் மனைவி தம்மிடம் விசுவாசமாக இருந்ததில்லை எனவும்,

தமது 8 வயது மகன் தனக்கு பிறந்தது இல்லை எனவும் அந்த கணவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் தாம் இதுவரை தமது மகனுக்காக செலவிட்ட மொத்த பணத்தையும் தமது முன்னாள் மனைவி திரும்ப தர வேண்டும் என கோரியுள்ளார்.

மட்டுமின்றி, இந்த விவகாரத்தால் தமக்கு ஏற்பட்ட மனத்துயரத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

மேலும், தமது மகனின் உண்மையான தந்தை யார் என்பதை அவர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்த வேண்டும் எனவும், தமது மகன் அவனது உண்மையான தந்தை யார் என்பதை அறியும் கடைமை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தமது முன்னாள் கணவர் குறிப்பிட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டும் பொய் எனவும், இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் அவரது மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இருவரது வாதங்களையும் ஆராய்ந்த பின்னரே முடிவுக்கு வர முடியும் எனவும், இதனால் தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...