காது கேளாத குறைபாட்டால் தண்டவாளத்தில் உயிரிழந்த பிரித்தானியர்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

காது கேளாமை குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த இரன்டு பிரித்தானிய ரயில்வே தொழிலாளர்கள் இன்று ரயில்தண்டவாளத்தில் பலியாகியுள்ளதாக என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் ஸ்வான்சீ பகுதியிலிருந்து கார்டிஃப் நோக்கி செல்லும் ரயில்வே வழித்தடத்தில் இன்று தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது பயணிகள் ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. தொழிலாளர்களில் இருவருக்கு காது கேளாமை குறைபாடு இருந்ததால், அவர்கள் இருவரும் ரயில் வரும் சத்தத்தை கவனிக்காமல் இருந்துள்ளார்.

வேகமாக வந்த ரயில் சகபணியாளரின் கண்முன்னே இருவரின் மீது மோதியுள்ளது.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முயற்சி செய்தும் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை.

இறந்த இருவரும் 53 மற்றும் 63 வயதுடையவர்கள் என்றும், சம்பவம் குறித்து அவர்களுடைய குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பாளர் ஆண்டி மோர்கன் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...