தான் குளித்த நீரை 30 டொலர்களுக்கு விற்ற இளம்பெண்!

Report Print Kabilan in பிரித்தானியா

இன்ஸ்டாகிராமில் பிரபலமான பெண்ணொருவர், தான் குளித்த நீரை தனது Followers-க்கு 30 டொலர்களுக்கு விற்றுள்ளார்.

சமூக வலைதளங்களில் தற்போது பலர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர். அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்றவற்றை போல இன்ஸ்டாகிராமில் பலர் தங்களை பிரபலப்படுத்தி, பொருட்களை விற்று வருகின்றனர்.

இவ்வாறு அதிகப்படியான பொருட்கள் விற்கப்படுவதுடன், வித்தியாசமாகவும் இருக்கும். இந்நிலையில், பிரித்தானியாவில் வசித்து வரும் Belle Delphine(19) என்ற இளம்பெண் வித்தியாசமான ஒன்றை விற்பனை செய்துள்ளார்.

இவருக்கு இன்ஸ்டாகிராமில் 39 லட்சம் Followers இருக்கிறார்கள். இவர் ஒரு Cosplay கலைஞர் ஆவார். இந்த நிலையில் தனது Followers-யிடம், தான் குளித்த நீரை பாட்டிலில் அடைத்து 30 டொலர்களுக்கு விற்கப் போவதாக அறிவித்தார் Belle.

உடனே அவருக்கு ஆர்டர்கள் குவிந்தன. மூன்றே நாளில் மொத்த போத்தல்களும் விற்றுத் தீர்ந்தன. அந்த போத்தலின் மீது ‘This water is not for drinking and should only be used for sentimental purposes’ என Belle பதிவிட்டுள்ளார்.

அதாவது இந்த நீர் குடிப்பதற்கு இல்லை, உணர்வுப்பூர்வமான நோக்கத்திற்காக மட்டுமே என தெரிவித்துள்ளார். இதற்கு ஒருபுறம் விமர்சனங்கள் எழுந்தாலும், மறுபுறம் டொலர்களை குவித்துக்கொண்டிருக்கிறார் Belle.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்