சொன்னது போலவே பிரித்தானிய எண்ணெய்க்கப்பலை கைப்பற்றியதா ஈரான்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

துறைமுகம் நோக்கி வந்த எண்ணெய்க்கப்பல் ஒன்று திடீரென நின்றதை கடற்படை கவனித்ததையடுத்து, அது ஈரானால் கைப்பற்றப்பட்டதா என்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தாங்கள் கப்பல் எதையும் கைப்பற்றவில்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் அரசியல்வாதியும் ராணுவ தலைவருமான ஒருவர், தங்களது கப்பலை பிரித்தானியா கைப்பற்றியதற்கு பழி வாங்கும் விதமாக பிரித்தானிய எண்ணெய்க்கப்பல் ஒன்றை கைப்பற்றுவது தங்கள் கடமை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று பிரித்தானிய எண்ணெய்க்கப்பல் ஒன்று திடீரென நின்றதை, கடற்படையின் கண்காணிப்பு அமைப்பு கண்டறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அது வழக்கமான ஒரு நிகழ்வுதான் என பிரித்தானிய அரசு தெரிவித்தது.

அந்த கப்பல் முன்கூட்டியே துறைமுகத்துக்கு வந்ததால் அது சற்று மெதுவாக நகர்ந்ததேயன்றி வேறு பிரச்சினை எதுவும் இல்லை, பிரச்சினை எதுவும் ஏற்பட்டதாக சமிக்ஞை எதுவும் கொடுக்கப்படவில்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் ஈரானும் பெர்சிய வளைகுடாவில் பிரித்தானிய எண்ணெய்க்கப்பல் ஒன்று தனது படைகளால் கைப்பற்றப்பட்டதாக வெளியான செய்தியை மறுத்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers