இளவரசர் சார்லஸ் பணியாற்றிய கப்பல்.. அதை உடைக்க விடமாட்டேன்! பிரித்தானியரின் எதிர்ப்பு

Report Print Kabilan in பிரித்தானியா

இந்திய கடற்படையின் ‘ஐ.என்.எஸ் விராட்’ கப்பலை உடைக்கக் கூடாது என்று, பிரித்தானியாவைச் சேர்ந்த ஆன்டி ட்ரீஸ் என்பவர் கோரிக்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஹெச்.எம்.எஸ் ஹெர்ம்ஸ் என்ற கப்பல், கடந்த 1959ஆம் ஆண்டு பிரித்தானிய ராயல் நேவியில் பணியில் சேர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1982ஆம் ஆண்டு பாக்லாந்து தீவுகளுக்காக அர்ஜெண்டினாவுடன் பிரித்தானியா போரிட்டபோது, இந்த கப்பல் முக்கிய பங்காற்றியது.

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் இந்த கப்பலில் ஹெலிகாப்டர் பைலட்டாக பணியற்றியுள்ளார். பிரித்தானியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலாக இருந்த இந்தக் கப்பல், கடந்த 1985ஆம் ஆண்டு கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றது. அதன் பின்னர், 1987ஆம் ஆண்டு பழுதுகள் நீக்கப்பட்டு இந்தியாவுக்கு விற்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஐ.என்.எஸ் விராட் என்று பெயரிடப்பட்டு இந்திய கடற்படையில் இந்தக் கப்பல் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இந்த கப்பலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அருங்காட்சியகமாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது.

கடந்த திங்கட்கிழமை இந்திய பிரதமர் மோடி, விராட் கப்பலை உடைக்க முடிவு செய்திருப்பதாக நாடாளுமன்றத்தில் பேசினார். இதற்காக கடற்படையுடன் விவாதித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், விராட் கப்பலை உடைக்கக் கூடாது என்றும், அதனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த ஆன்டி ட்ரீஸ் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் இந்த கப்பலில் ஏர்மேனாக பணி புரிந்து வந்துள்ளார்.

தற்போது ஐ.டி. நிறுவனம் நடத்தி வரும் ஆன்டி ட்ரீஸ், விராட் கப்பலை உடைப்பதற்கு பதிலாக தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதற்காக 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை தரவும் தயாராக இருப்பதாகவும் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கப்பலை ஆன்டி ட்ரீஸ், லண்டன் அல்லது லிவர்பூல் நகரில் அருங்காட்சியகமாக மாற்றி நிறுத்த அவர் திட்டமிட்டுள்ளார். அத்துடன் விராட் கப்பலை மீண்டும் இங்கிலாந்துக்கு கொண்டு வர பிரித்தானிய அரசு உதவ வேண்டும் என்றும் ட்ரீஸ் கோரியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...