வெறும் 0.2 சதவிகித மக்களால் தெரிவு செய்யப்படும் பிரித்தானியாவின் அடுத்த பிரதமர்: வெளிவரும் பின்னணி தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் அடுத்த பிரதமரை தெரிவு செய்வதற்கான சிறப்பு தேர்தலானது ஆளும் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களுக்கு இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில் தெரேசா மே தமது பிரதமர் பதவியை துறந்தார்.

இதனையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியானது பிரித்தானியாவின் புதிய பிரதமரை தெரிவு செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இறுதி கட்டமாக பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு விடை அறியும் வகையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தங்களது உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியுள்ளது.

இதனால் மொத்தம் 67 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரித்தானியாவின் அடுத்த பிரதமரை தெரிவு செய்வது கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களான 160,000 பேர் என தெரிய வந்துள்ளது.

இது மொத்த வாக்காளர்களில் வெறும் 0.2 சதவிகிதமே. இவர்களுக்கான வாக்குச் சீட்டு இந்த வார இறுதியில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த 0.2 சதவிகித மக்கள் முடிவு செய்வார்கள் பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் போரிஸ் ஜான்சனா அல்லது ஜெர்மி ஹன்ட் என்பவரா என.

இதனையடுத்து பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் யார் என்பது தொடர்பில் ஜூலை 23 ஆம் திகதி உறுதியான தகவல் வெளிவரும் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்