அதிக வியர்வையுடன் விமான நிலையம் வந்த நபர்: பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜோஷ் இர்வின் (46) என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் பிரான்சில் நீண்ட நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

பிரான்சில் அதிக ஆடைகள் வாங்கியிருந்ததால், அவருடைய சூட்கேஸ் கனமாக இருந்துள்ளது. விமான நிலையத்தில் இதற்கு தனியாக பெரிய தொகை செலுத்த வேண்டும் என்பதால் அதனை தவிர்க்க ஜோஷ் முயற்சி செய்துள்ளார்.

உடனே அவர் தன்னுடைய சூட்கேஸை திறந்து உள்ளிருந்த 13 டி-சர்ட்களை ஒன்றன் மேல் ஒன்றாக உடுத்தியுள்ளார்.

இதனால் அவருடைய உடலில் வியர்வை அதிகரித்துள்ளது. இதனை கவனித்த அதிகாரி ஒருவர் சூட்கேஸை சோதனை செய்து, அவருடைய ஆடைகளை கழற்றுமாறு கூறியுள்ளார்.

அவர் ஒவ்வொரு டி-சர்ட்டாக கழற்றுவதை பார்த்த அதிகாரிகள் சிரிக்க ஆரம்பித்துள்ளனர். பின்னர் சோதனையில் அவரிடம் சந்தேகிக்கும் படி ஒன்றும் இல்லை என்பதை புரிந்துகொண்ட அதிகாரிகள், ஆடையை கழற்றுவதை நிறுத்துமாறு கூறி அனுப்பியுள்ளனர்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்