பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ரூ.1,412 கோடி அபராதம் விதிப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமானது வாடிக்கையாளர்களின் தகவல் திருட்டில் சிக்கிய நிலையில் தற்போது ரூ.1,412 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் 183 நாடுகளுக்கு சேவையை மேற்கொள்ளும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் இணைய தளத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 21 முதல் செப்டம்பர் மாதம் 5 வரையான காலகட்டத்தில் தொடர்ந்து இரண்டு வார காலம் தகவல் திருடர்களால் முடக்கப்பட்டு, வாடிக்கையாளர்களின் தகவல்கல் திருடப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தற்போது தகவல் ஆணையர் அலுவலகத்தால் ரூ.1,412 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் இதுவரை எந்த விமான சேவை நிறுவனத்திற்கும் இந்த அளவுக்கு பெரும் தொகை அபராதம் விதிக்கப்பட்டதில்லை என கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தங்களுக்கு அதிர்ச்சியையும் அதே வேளை ஏமாற்றத்தையும் அளிப்பதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அபராதம் விதிக்கப்பட்ட இந்த தொகையானது சர்வதேச அளவில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 1.5 சதவிகிதம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய தகவல் திருட்டு விவகாரத்தில் சுமார் 380,000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்களின் தனிப்பட்ட தகவல்களோ பாஸ்போர்ட்டு தகவல்களோ திருடு போகவில்லை என பின்னர் தெரியவந்தது.

தற்போது இந்த அபராதம் தொடர்பில் மேல்முறையீடு மேற்கொள்வது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers