உயிரிழந்த 4 வயது மகன்.. ஆசைக்காக போராடும் தந்தை: வெளிச்சத்திற்கு வந்த டிஸ்னியின் உண்மை முகம்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் அரிய நோயால் உயிரிழந்த 4 வயது சிறுவனின் கல்லறையில், ஸ்பைடரை மேனை வைக்க, அமெரிக்காவின் டிஸ்னி நிறுவனம் தடை விதித்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்தவர் லாயிட் ஜோன்ஸ், இவரின் 4 வயது மகன் ஒல்லி ஜோன்ஸ், தீவிர மார்வெல் ரசிகராக இருந்துள்ளார். அவர் ஸ்பைடர் மேன் கதாபாத்திதை மிகவும் விரும்பி ரசித்துள்ளார். அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட ஒல்லி ஜோன்ஸ், கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், தனது மகனின் கல்லறையில் ஸ்பைடர் மேனை வைக்க டிஸ்னி நிறுவனத்திடம் அனுமதி கேட்டுள்ளார் லாயிட் ஜோன்ஸ். ஆனால், அந்நிறுவனம் ஸ்பைடர் மேனை கல்லறையில் வைக்க தடை விதித்துள்ளது.

டிஸ்னி நிறுவனத்தின் பதில் ஆச்சரியமாக இருந்தது என்று கூறி லாயிட் ஜோன்ஸ். இப்போது என் மகன் இறந்துவிட்டார், நாங்கள் இனி பணம் செலவழிக்க மாட்டோம், அவர்கள் எங்களை பற்றி கவலைப்பட போவதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், லாயிட் ஜோன்ஸின் பழைய நண்பர் ஒருவர், தடையை மாற்றியமைக்க டிஸ்னிக்கு அழைப்பு விடுத்து, இணையத்தில் மனுவைத் தொடங்கியுள்ளார். இதில், உயிரிழந்த சிறுவனுக்கு ஆதரவாக, குறித்த மனுவில் முதல் நாளிலே 5,500 க்கும் மேற்பட்டோர் கையெழுத்து இட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers