கணவரை விட்டு ஓட்டம் பிடித்த மனைவி: ஸ்காட்லாந்தில் வீடு கட்டும் திட்டத்தை கைவிட்ட துபாய் அரசர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மனைவியுடனான பிரச்சினையை அடுத்து ஸ்காட்லாந்தில் ஒன்பது படுக்கையறைகள் கொண்ட வீடு கட்டும் திட்டத்தைக் கைவிட்டார் துபாய் அரசர்.

துபாய் அரசரான Sheikh Mohammed bin Rashid al-Maktoum (69)க்கு ஸ்காட்லாந்தில் ஏற்கனவே ஹெலிபேடுகளும் 14 படுக்கையறைகள் கொண்ட ஒரு வீடும் அதன் அருகே 16 படுக்கையறைகள், நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை கொண்ட ஒரு லாட்ஜும் உள்ளன.

என்றாலும் ஓய்வுக்காக ஸ்காட்லாந்துக்கு வரும் நேரங்களில், குடும்பமாக தங்குவதற்கு, ஆறு மனைவிகளும் 23 பிள்ளைகளும் கொண்ட Sheikh Mohammedக்கு அந்த இடம் போதவில்லையாம்.

எனவே ஒன்பது படுக்கையறைகள் கொண்ட இரண்டு மாடி வீடு ஒன்றைக் கட்டுவதற்கு விண்ணப்பம் அளித்திருந்தார் அவர்.

ஆனால் இந்த திட்டத்திற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில் இந்த ஆண்டின் துவக்கத்தில் 19 படுக்கையறைகள் கொண்ட ஒரு லாட்ஜ் மற்றும் ஒன்பது படுக்கையறைகள் கொண்ட ஒரு வீடு ஆகியவற்றைக் கட்டுவதற்கு அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது.

இந்நிலையில்தான் Sheikh Mohammedஇன் ஆறாவது மனைவியான இளவரசி Haya bint al-Hussein (45) துபாயிலிருந்து தப்பி லண்டனில் பதுங்கினார்.

மேலும் வீடு கட்டுவதற்கு எதிர்ப்புகள் வந்த நிலையில் அவற்றை எதிர்த்து மேல் முறையீடு செய்ய திட்டமிட்டிருந்த அரசர், சொந்த வாழ்க்கை பிரச்சினை தெருவுக்கு வந்ததையடுத்து அந்த திட்டத்தை கைவிட்டார்.

தற்போது வீடு கட்டும் திட்டத்தை விட்டு விட்டு, ஜூலை 30ஆம் திகதி லண்டன் உயர் நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க இருக்கிறார் Sheikh Mohammed.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers