பணத்துக்கு ஆசைப்பட்டு 35 வயது அதிகமான பிரித்தானிய பெண்ணை மணந்த இலங்கை இளைஞர்...

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த 60 வயது பெண்ணை இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் பணத்துக்காக திருமணம் செய்த நிலையில் ஏமாற்றப்பட்ட பெண்ணின் பரிதாப கதை Channel 5 தொலைகாட்சியின் Holiday Love Cheats Exposed நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகியுள்ளது.

ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் டயன் டீ (60). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு சுற்றுலா வந்த போது அந்நாட்டை சேர்ந்த பிரியஞ்சனா டீ ஜோய்சா (26) என்ற இளைஞரை சந்தித்துள்ளார்.

பின்னர் வயது வித்தியாசத்தை மீறி இருவரும் அடுத்த ஆறு மாதங்களில் திருமணம் செய்து கொண்டனர். இதன்பின்னர் பிரியஞ்சனா ஏற்கனவே இளம் பெண்ணை திருமணம் செய்தவர் என டயனுக்கு தெரியவந்தது.

இதையடுத்து பிரியஞ்சனுக்காக அதிகளவில் பணத்தை டயன் செலவு செய்துள்ளார்.

கடந்த 2017-ல் பிரித்தானியாவில் உள்ள தனது வீட்டை விற்ற டயன் கொழும்பில் ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.

இதோடு £31,000 மதிப்புள்ள மினி பேருந்தையும் பிரியஞ்சனுக்காக வாங்கி கொடுத்துள்ளார். மொத்தமாக £90,000 வரை கணவருக்கு டயன் செலவு செய்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு மே மாதம் 30-ஆம் திகதி பிரியஞ்சனா அவர் நண்பர்கள் வீட்டில் சுட்டு கொல்லப்பட்டார்.

பிரியஞ்சனா வசதியாக வாழ்வதை பார்த்த அவர் நண்பர்கள் பணத்துக்காக அவரை கொன்றுவிட்டதாக டயன் கூறுகிறார்.

டயன் கூறுகையில், பிரியஞ்சனா கேட்கும் போதெல்லாம் அதிகளவு பணத்தை அள்ளி கொடுத்தேன், அவர் வீட்டில் தான் தங்கியிருந்த போது நண்பர்களுடன் வெளியில் சென்றுவிடுவார், ஆனால் திரும்ப வரவே மாட்டார்.

என் மீதுள்ள காதலால் பிரியஞ்சனா என்னை மணக்கவில்லை என்பதை பின்னரே உணர்ந்தேன்.

பணத்துக்காக தான் என்னை அவர் திருமணம் செய்ய நினைக்கிறார் என எனது குடும்பத்தார் கூறியும் நான் முன்னர் கேட்கவில்லை.

நான் பிரியஞ்சனாவுடன் தங்கியபோது என்னை வீட்டில் அடைத்து வைத்து அவர் குடும்பத்தார் பணம் கேட்டு மிரட்டுவார்கள்.

கணவர் இறப்புக்கு பின்னர் சொந்த நாட்டுக்கு திரும்ப கூட என்னிடம் பணம் இல்லாமல் இருந்தது.

பின்னர் எப்படியோ பணத்தை சேர்த்து கொண்டு கடந்தாண்டு ஊருக்கு திரும்பினேன்.

பிரியஞ்சனாவுக்காக எல்லாவற்றையும் கொடுத்தேன், அது எவ்வளவு பெரிய தவறு என பின்னரே உணர்ந்தேன், என்னை அவர் காதலிக்கவேயில்லை என்பது தான் நிஜம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்