பிரித்தானியா பாராளுமன்றம் எரியும்.. பிக் பென் சாம்பலாகும்! குறி வைக்கும் தீவிரவாதிகள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா பாராளுமன்றம் எரியும் என்று தீவிரவாதிகள் சமீபத்தில் மிரட்டல் விட்டிருக்கும் புகைப்படம் வெளியாகி பொதுமக்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதராவளர்கள் பிரித்தானியாவின் பிக் பென் டவர் எரிந்து சாம்பலாகின்ற புகைப்படத்தை வெளியிட்டனர்.

அதில், தற்கொலை தாரி தன் உடலில் வெடிகுண்டுடனும், அதன் பின் அதில் அல்லாவிற்கு எதிராக யார் எல்லாம் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் நிர்மூலமாக்கு எனவும், கூடிய விரைவில் லண்டனில் தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தளத்தில் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதில், கையில் துப்பாக்கியுடன் தீவிரவாதி இருக்கிறான், அருகில் பிரித்தானியாவின் பாராளுமன்றம் கொளுந்து விட்டு எரிகிறது, அதே போன்று பிக் பென் டவரும் எரிந்து சம்பாலாகுவது போன்று உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்