நான் உயிருடன்தான் இருக்கிறேன்: கிரிக்கெட் போட்டியின்போது ’மாயமானதால்’ பிரபலமான பெண்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வென்ற அந்த கணத்தை ரசிகர்கள் துள்ளிக் குதித்து கொண்டாடிய தருணத்தில், உற்சாக மிகுதியால் சற்று அதிகமாக குதித்த ஒரு ரசிகை ’மாயமானார்’.

அதாவது அந்தப் பெண் குதிக்கும்போது கீழே விழுந்தது போல் காணப்பட்ட நிலையில், அதன் பின் அவரை பார்க்கமுடியவில்லை.

சிலர், அவர் இன்னும் விழுந்து கொண்டே இருக்கிறார், கீழே போய் சேரவில்லை என்பது போல அவரை நையாண்டி செய்து ட்வீட்கள் போட சிலர் அவருக்கு என்ன ஆயிற்றோ என உண்மையாகவே கவலைப்பட்டனர்.

நியூசிலாந்து பத்திரிகையாளர் Hilary Barry, அந்த பெண் குதிக்கும் படத்தை பதிவேற்றம் செய்து அதன் கீழ், பழுப்பு நிற சட்டை அணிந்த பெண்ணுக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று எழுத, அவரது ட்வீட் 500,000 முறை படிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த மாயமான பெண்ணின் பெயர் Rachael Porsz என்றும், அவர் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகை என்றும் தெரியவந்துள்ளது.

அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை உறுதி செய்து கொள்கிறேன், எனக்காக கவலைப்பட்ட அனைவருக்கும் நன்றி என்று எழுதியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி பெற்று உலகின் கவனம் ஈர்க்க, அதே போட்டியின்போது கீழே விழுந்து, ஒரே நாளில் உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்துவிட்டார் Rachael Porsz.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்