போட்டி ஆதிவாசிகளின் மோதலை தடுத்து நிறுத்திய பிரித்தானிய ஹீரோ இளம்பெண்: புல்லரிக்க வைக்கும் ஒரு வீடியோ!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட இரண்டு போட்டி ஆதிவாசிக் குழுவினரிடையே நுழைந்து, தனது உயிரையும் பொருட்படுத்தாது பிரித்தானிய இளம்பெண் ஒருவர் சமாதானம் செய்து வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை புல்லரிக்க வைத்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த Livia Simoka, ஆவணப்படம் ஒன்றை எடுப்பதற்காக காங்கோ நாட்டிற்கு சென்றிருந்தார்.

Mbenejli என்ற ஆதிவாசிக் குழுவுடன் தங்கியிருந்த Livia, அவர்களை Bantu என்ற ஆதிவாசிக்குழுவினர் தங்களுக்கு அடிமைகள் போல வைத்திருப்பதை அறிந்து கொண்டார். ஒரு நாள் திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் இரண்டு குழுவில் உள்ளவர்களுக்கும் மோதல் வெடித்தது.

Bantu ஆதிவாசிக் குழுவைச் சேர்ந்த Prince என்னும் நபர் Mbenejli குழுவில் உள்ள ஒருவரைப் பிடித்து தாக்கியுள்ளார்.

அந்த நபர் Princeஇன் உறவினரிடம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை திருப்பிக் கேட்பதில்தான் சண்டை வந்துள்ளது.

Prince, Mondonga என்ற நபரை இரத்தம் வரும் அளவு தாக்க, Mbenejli இனத்தவர்கள் பயந்து தூரமாக ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

Mondongaவின் மனைவி மட்டும், தன் கணவரை கொன்று விட வேண்டாம் என்றும், அவரை விட்டுவிடுமாறும் கெஞ்சுகிறார்.

மற்றவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், என்ன நடக்கிறது என்றே புரியாத நிலையிலும், ஹீரோ போல சண்டையிடும் இருவருக்கும் இடையில் நுழைகிறார் Livia.

அவர் படபடவென பேசி Princeஐ அமைதியாக இருக்கச் சொல்ல, அவரும் சட்டென அமைதியாகிறார்.

பின்னர் Prince நடந்ததை விளக்குகிறார். அதிலிருந்து Mbenejli இனத்தவர்களை Bantu இனத்தவர்கள் மிருகங்கள் போல நடத்துவதும், அவர்களை அடிமைகள் போல வைத்திருப்பதும் தெரியவருகிறது.

அந்த Prince என்னும் நபர், Mondonga எனக்கு சொந்தமானவனல்ல, ஆனால் அவன் மனைவி எனக்கு சொந்தம், அந்த குடும்பம் முழுவதும் எனக்கு சொந்தம் என்று சொல்லும்போதுதான் கொஞ்சம் உண்மை புரிகிறது Liviaவுக்கு.

Akayaவின் குடும்பம் எனக்கு சொந்தம், அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள், அவர்களது வீடுகளைப் பாருங்கள், எங்கள் உடைகள் எவ்வளவு சுத்தமாக இருக்கின்றன, அவர்கள் எவ்வளவு மோசமாக உடை உடுத்தியிருக்கிறார்கள் பாருங்கள் என்று Prince கூற, இரண்டு ஆதிவாசிக் குழுக்கள் என்றால், அவர்கள் ஒருவருக்கொருவர் நட்பாக இருப்பார்கள் என்று நினைத்தேன், ஆனால் இப்படி மோதிக் கொள்வார்கள் என எனக்கு தெரியாது என்கிறார் Livia.

ஒரு பக்கம் இவர்கள் இப்படி சண்டையிடுவார்கள் என்ற உண்மை தனக்கு தெரியாததால், அவர்களைப் பற்றி முழுமையாக கற்றுக் கொள்ளாமலே இங்கே வந்தது எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது என்கிறார் Livia.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்