ஆபாசத்திற்கு அடிமையான இளைஞன்... லண்டன் பெண் கொலை வழக்கில் சிக்கிய நபர் குறித்து வெளியானவை...

Report Print Santhan in பிரித்தானியா

ஆபாசத்திற்கு அடிமையான இளைஞர் ஒரே மாதத்தில் இரண்டு பெண்களை கொலை செய்திருக்கும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த Ms Tudos என்ற 22 வயது இளம் பெண் கடந்த 2017-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தின் மாலை நேரத்தில் Camden-ல் இருக்கும் பப்பிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்தார்.

அவரது மார்பில் பேட் மேன் லோலோ பொறிக்கப்பட்டிருந்தது.

இதனால் இது தொடர்பாக பொலிசார் மேற்கொண்டு வந்த கிடுக்குப் பிடி விசாரணையில், இந்த கொலையை செய்தவன் ஸ்பெயினின் மான்ஸ்டெர்ரட்டைச் சேர்ந்த கசிம் லிவிஸ் என்பவன் என்பது தெரியவந்தது.

இதனால் இவருக்கு நீதிமன்றம் 29 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இந்நிலையில் Ms Tudos-ஐ கொலை செய்வதற்கு முன்னர் இவன் Muswell Hill பகுதியைச் சேர்ந்த Catherine Burke என்ற 55 வயது பெண்ணை கொலை செய்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த அவரை பாலியல் துண்டலுக்கு வற்புறுத்தி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்த அவனின் டி.என். ஏ சோதனையில் இந்த கொலைக்கும் அவனுக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், நீதிமன்றத்தில் அவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளான்.

மேலும் அவனுடைய போனை பறிமுதல் செய்து பார்த்த போது, அதில் ஆபாச புகைப்படங்கள் இருந்ததாகவும், இவன் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers