இறுதிப்போட்டியின் திக் திக் நிமிடங்கள்.. நேரலையில் கண்ட ரசிகை செய்த செயல்; வைரலான வீடியோ

Report Print Basu in பிரித்தானியா

உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றதை டிவி நேரலையில் கண்ட வயதான ரசிகை, கொடுத்த ரியக்சன் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த ஜூலை 14ம் திகதி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் மோதிய இங்கிலாந்து அணி, பவுண்டரிகள் அடிப்படையில் உலகக் கோப்பையை வென்றது.

இங்கிலாந்து அணியின் வெற்றியைக் கொண்டாடும் இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸை சேர்ந்த வயதான கிரிக்கெட் ரசிகையின் வீடியோ அனைவரது மனதைக் கவரும் வகையில் இணையத்தில் வைரலாகியது.

குறித்த வீடியோவை மூதாட்டியின் பேரன் க்வென் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தின் உலகக் கோப்பை வெற்றியை கொண்டாடும் எனது பாட்டியின் ரியக்சனை பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், மூதாட்டி தொலைக்காட்சியில் போட்டியைப் பார்ப்பதையும், உலகக் கோப்பை வரலாற்றில் கண்ட மிக அற்புதமான இறுதிப் போட்டிகளில் ஒன்றின் முன்னேற்றங்களுக்கு எதிர்வினையாற்றுவதையும் காணலாம். இந்த வீடியோவை கண்ட பலர் மூதாட்டியின் நாட்டுப்பற்றை பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த வீடியோவை இங்கிலாந்து அணியின் கவனித்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என பலர் கோரி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers