18 வயது மாணவனை முத்தமிட்ட ஆசிரியை: இரண்டு பேரின் வேலை போன சோகம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பார்ட்டி ஒன்றிற்கு சென்ற இரண்டு ஆசிரியைகளில் ஒருவர் ஒரு 18 வயது மாணவனை முத்தமிட்டதன் காரணமாக, அவர்கள் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

Jennifer Arding (29) மற்றும் Charlotte Bradley (32) ஆகிய இருவரும் ஆசிரியைகளாக பணி செய்பவர்கள். இருவரும் Kentஇலுள்ள கிளப் ஒன்றிற்கு சென்றுள்ளார்கள்.

புறப்படுவதற்கு முன் இருவகை மதுபானங்களையும் அருந்தியிருக்கிறார்கள் இருவரும். கிளப்பில் முன்னாள் மாணவர்கள் சிலர் பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருக்க, இவர்கள் இருவரும் அவர்களுடன் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்போது அவர்கள் பணி புரியும் அதே பள்ளியில் படிக்கும் ஒரு 18 வயது மாணவன் அங்கிருந்திருக்கிறான்.

Jennifer Ardingம் அந்த மாணவனும் மிக இறுக்கமாக ஒருவரையொருவர் கட்டியணைத்திருந்ததையும், காதலுடன் நீண்ட நேரம் முத்தமிட்டுக் கொண்டதையும்

அங்கிருந்த இன்னொரு மாணவி உட்பட பலரும் பார்த்திருக்கிறார்கள்.

விடயம் வெளிவந்ததையடுத்து ஆசிரியைகள் இருவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன் கொண்டு வரப்பட்டார்கள்.

விசாரிக்கும்போது, தானும் அந்த மாணவனும் முத்தமிட்டுக் கொண்டது உண்மைதான் என்றாலும், தான் அதை துவக்கவில்லை என்று குறிப்பிட்டார் Jennifer Arding.

அந்த மாணவன்தான் அங்கிருக்கும் பலரையும் முத்தமிட முயன்றதாகவும், தன்னை முத்தமிடும்போது, தான் போதையில் இருந்ததால், அதை தடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார் Jennifer Arding.

அதற்கு பின்னர் அனைவரும் சேர்ந்து ஒரே காரில்தான் சென்றதாகவும்,அப்போது எதுவும் தவறாகவும் நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார் Jennifer Arding.

ஆனால், பின்னர் அந்த மாணவனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், நடந்ததை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றும், அப்படி சொன்னால் தனது வேலை போய்விடும் என்றும் தெரிவித்துள்ளார் Jennifer Arding.

அந்த மாணவனும் இதை வெளியில் சொல்லவில்லை என்றாலும், அதே கிளப்புக்கு சென்றிருந்த ஒரு மாணவியின் தாயார், வீடியோ ஒன்றின் மூலம் கிளப்பில் நடந்ததை அறிந்து புகார் அளிக்க, விடயம் வெளியே வந்துவிட்டது.

தாங்கள் அருந்திய பானத்தில் ஏதோ போதைப்பொருள் கலக்கப்பட்டிருக்கலாம் என இரு ஆசிரியைகளும் நம்பினாலும், இருவரும் நடந்த சம்பவத்தையடுத்து தத்தம் வேலையை ராஜினாமா செய்து விட்டனர்.

இருவருக்கும் ஆசிரியர் பணி செய்ய நிரந்தர தடை விதித்து ஒழுங்கு நடவடிக்கை ஏஜன்சி உத்தரவிட்டிருந்தாலும், இரண்டு வருடங்களுக்குப்பின் அவர்கள் இருவரும் மீண்டும் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers