நியூசிலாந்தின் கின்னஸ் சாதனையை முறியடித்த பிரித்தானியா! எதில் தெரியுமா?

Report Print Kabilan in பிரித்தானியா

உலகிலேயே மிகவும் செங்குத்தான சாலை என்ற நியூசிலாந்தின் சாதனையை, பிரித்தானியாவின் வேல்ஸில் உள்ள சாலை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

நியூசிலாந்து நாட்டில் உள்ள டியூண்டின் பகுதியில் பால்ட்வின் என்ற சாலை உள்ளது. இந்த சாலையானது 35 சதவித அளவிற்கு செங்குத்தாகவும், இருபுறங்களிலும் வீடுகளும் இருந்ததால், உலகிலேயே மிகவும் செங்குத்தான சாலை என்று கின்னஸில் இடம்பிடித்தது.

இந்த சாதனைக்கு பின்ன வேறு எவ்வித சாலையும் கின்னஸில் இடம்பெறவில்லை. இந்நிலையில் பிரித்தானியாவின் சாலை ஒன்று இதனை முறியடித்துள்ளது.

வேல்ஸின் ஹார்லெச் நகரில் உள்ள போர்ட் பென் லெச் எனும் சாலையே இந்த கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.

இந்த சாலை 37.5 சதவித அளவு செங்குத்தாக உள்ளது. இதனை கடந்த 6ஆம் திகதி உலக கின்னஸ் சாதனை நிறுவன அதிகாரிகள் உறுதி செய்தனர். அதன் பின்னர், அப்பகுதியில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு கின்னஸ் சாதனை சான்றிதழை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, ஹார்லெச் பகுதி மக்கள் இந்த சாதனையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இங்கிலாந்திடம் கிரிக்கெட்டில் நியூசிலாந்து தோல்வியடைந்த நிலையில், தற்போது கின்னஸ் சாதனையை முறியடித்ததை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Reuters

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்