விஜய் மல்லையாவை நாடு கடத்தும் விசாரணை: அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைத்த பிரித்தானிய நீதிமன்றம்

Report Print Kabilan in பிரித்தானியா

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான விசாரணையை, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என பிரித்தானிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, அதனை திருப்பி செலுத்தாமல் கடந்த 2016ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து, மல்லையாவை நாடு கடத்தக் கோரி லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்தத் தடையுமில்லை என்று கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. பிரித்தானிய உள்துறை அமைச்சரும் அதற்காக கையெழுத்திட்டார். ஆனால், பிரித்தானிய உயர்நீதிமன்றத்தில் நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மல்லையா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விரிவான விசாரணை, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் திகதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்