உலகளவில் அதிகம் விரும்பப்படும் மனிதர்கள் யார்? டோனிக்கு கிடைத்த இடம்... லண்டன் நிறுவனம் நடத்திய ஆய்வு

Report Print Raju Raju in பிரித்தானியா

உலகளவில் மற்றும் இந்திய அளவில் அதிகம் விரும்பப்படும் மனிதர்கள் குறித்த ஆய்வை லண்டன் நிறுவனம் நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘யூகவ்’ (YouGov) என்ற நிறுவனம் வெளியிட்ட முடிவுகளின்படி உலகளவில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்களில் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

அவருக்கு அடுத்த நிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா இருக்கிறார்.

உலகளவில் அதிகம் விரும்பப்படும் பெண்களின் பட்டி யலில் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா, அமெரிக்க தொலைக்காட்சி நடிகை ஓப்ரா வின்பிரே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவில் பிரதமர் மோடி அதிகம் விரும்பப்படும் பிரமுகராக இருக்கிறார்.

உலகளவில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்கள் வரிசையில் பிரதமர் மோடி 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

இந்தியாவில் பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில், அதிகம் விரும்பப்படும் பிரமுகர்களில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி 2-வது இடத்தில் இருக்கிறார்.

அதிகம் விரும்பப்படும் பிரமுகர்களில் முதல் 20 பேரில், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவருக்கு அடுத்த நிலையில் தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளார்.

இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் பெண்களில், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் முதலிடத்தில் உள்ளார்.

அதேபோல் பெண்களில் முதல் 20 இடங்களுக்குள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் ஆகியோர் உள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...