3 வயது மகளுடன் அப்பாவிகளை கொல்ல சதிதிட்டம்.. குழந்தைக்கு தீவிரவாதியின் முகம்: கதறும் விதவை தாய்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா தலைநகர் லண்டனில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி ரோடோவனே, தன்னையும், குழந்தையும் கொன்று இருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும் என அவர் மனைவி சாரிஸ்ஸ வேதனை தெரிவித்துள்ளார்.

ரசீது ரோடோவனேவின் மனைவி சாரிஸ்ஸ டிவி நேர்காணல் கூறியதாவது, லண்டன் தாக்குதலுக்கு பின் பொலிசார் என் குடியிருப்பை சூழ்ந்த பிறகே என் கணவர் ஒரு ஜிகாதி என்பது எனக்கு தெரியும்.

ரோடோவனேவின் முகத்தை என் 3 வயது குழந்தையிடம் பார்த்து நான் மிகவும் பீதி அடைந்துள்ளேன். ஒரு தீவிரவாதியின் முகத்தை என் குழந்தையிடம் கண்டு இதயம் நொறுங்கிவிட்டது. குழந்தை ரோடேவனே போல் இருந்தாலும் அவளிடம் நல்ல பண்புகளே உள்ளது.

அவர் என்னையும், குழந்தையும் கொன்று இருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும். குழந்தைக்கு எந்த மாதிரியான எதிர்காலத்தை அவர் அமைத்து தந்திருக்கிறார். அவள் எப்போதுமே தீவிரவாதியின் குழந்தையாகவே இருப்பார். ரோடோவனேவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் தினமும் அழுகிறேன்.

அவர் இப்போது உயிரோடு இருந்திருந்தால் நானே என் கையால் அவரை கொன்று இருப்பேன் என 41 வயதான சாரிஸ்ஸ கூறினார். மேலும், தாக்குதலுக்கு பயன்படுத்திய வாகனத்தை கொண்டு வர குழந்தையுடன் மற்ற தாக்குதல்தாரிகளுடன் சென்றார். குழந்தையை வைத்துக்கொண்டு அப்பாவி மக்களை கொல்ல அவர்கள் சதிதிட்டம் திட்டியுள்ளனர்.

அவர் குழந்தையை என்னிடம் கொண்டு வந்து கொடுத்த போது அவள் வியர்வையில் ஈராமாக நனைந்திருந்தாள். அப்போது, எனக்கு எந்தவித யோசனையும் இல்லை. அவர் அந்த நாளில் அவளது துணியை கூட மாற்றவில்லை. ஏனென்றால் அவர் சுத்தமாகவும் புனிதமாகவும் இருக்க விரும்பினார்.

நாளை குழந்தையை பார்த்துக் கொள்ள முடியுமா என கேட்ட போது, அவர் தன்னுடைய போனை காணவில்லை என கூறி சென்றுவிட்டார். அதுவே ரோடோவனேவை நான் கடைசியாக உயிரோடு பார்த்தது என சாரிஸ்ஸ கூறியுள்ளார்.

2017 யூன் 3ம் தேதி தாக்குதல் நடத்துவதற்கு 3 மணிநேரத்திற்கு முன்னர், ரோடோவனே குழந்தையை வீட்டில் விட்டு சென்றுள்ளார். 2010 ஆம் ஆண்டு சந்தித்த ரோடோவனே-சாரிஸ்ஸ் இரண்டு வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

2017 யூன் 3ம் தேதி ரோடோவனே உட்பட 3 தாக்குதல்தாரிகள் கூட்டாக லண்டனில் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர், 48 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட மூவரையும் பொலிசார் சுட்டுக்கொன்றனர். 3 பேரும் சட்டபடியே சுட்டுக்கொல்லப்பட்டதாக இம்மாத தொடக்கத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்