ஒரே மருத்துவமனையில் அடுத்தடுத்து பிறந்த குழந்தைகள்: 23 வருடங்களுக்கு பின் நடந்த அதிசயம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

1995 ஆம் ஆண்டில் பிளாக்பர்னில் உள்ள குயின்ஸ் பார்க் மருத்துவமனையில் ஜேம்ஸ் பார்ஸ்பி - கிறிஸ்டியன் என்கிற இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர்.

அடுத்த ஐந்தரை மணி நேரத்தில் அதே மருத்துவமனையில் எமி - வில்லியம் என்கிற இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர்.

இரண்டு ஜோடி குழந்தைகளின் பெற்றோரும் ஒரே பள்ளியில் ஒரே நாளில் சேர்த்துள்ளனர். பள்ளி வளாகத்தில் இவர்கள் சந்தித்து கொண்டாலும் ஒருமுறை கூட பேசியது கிடையாது. நம்மை போல இரட்டையர்கள் இந்த பள்ளியில் இருக்கிறார்கள் என சிரித்துக்கொண்டே கடந்துவிடுவார்கள். 4 பேரும் 10 வயதை கடக்கும் வரை இதுதொடர்ந்துள்ளது.

11 வயதை அடைந்த போது ஜேம்ஸ் - எமி நண்பர்களாக பழக ஆரம்பித்துள்ளனர். அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

ஒருமுறை அறிவியல் பாடப்பிரிவின் போது இருவரும் பிறந்த திகதி குறித்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது தான் தங்களுடைய வாழ்க்கையில் அனைத்தும் ஒரே மாதிரி நடப்பதை புரிந்து கொண்டு பெரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

சமீபத்தில் இந்த காதல் ஜோடிக்கு வெகுவிமரிசையாக திருமணம் நடைபெற்றது. அதோடு அல்லாமல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் முடிந்த இந்த ஜோடிக்கு தற்போது ஒரே மருத்துவமனையில் வேலையும் கிடைத்துள்ளது. இதனை நினைத்து தம்பதியினர் இன்னும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers