லண்டனில் ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து.. உள்ளூர் சாலைகள் மூடல்!

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவின் லண்டனில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 125 தீயணைப்பு வீரர்கள் விரைந்தன.

லண்டனின் கிழக்கு பகுதியான வால்தாம்ஸ்டோவ்வில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாலில் உணவகங்கள் உள்ள தளத்தில் திடீரென பற்றி தீ பெரும் புகையை கக்கியபடி கொளுந்துவிட்டு எரிந்தது.

அதனைத் தொடர்ந்து, உடனடியாக தகவல் அறிந்து தீயணைப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 125 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புகைமூட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. எனவே, அப்பகுதியில் சாலைகள் மூடப்பட்டதாக வால்தாம் வன கவுன்சில் உறுதிபடுத்தியது. இதனால் மக்கள் பலர் சிரமத்திற்குள்ளாகினர்.

இந்த விபத்தில் எவரேனும் சிக்கியுள்ளார்களா என்பது தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

லண்டனின் தீயணைப்பு படையின் நிலைய மேலாளர் ஸ்டீவ் ஸ்மித், புகைமூட்டம் அதிகமாக உள்ளதால் உள்ளூர்வாசிகள் தங்கள் கதவுகளையும், ஜன்னல்களையும் மூடி வைக்குமாறும் அறிவுறுத்துவதாக தெரிவித்தார்.

கட்டிடத்தின் கூரைப்பகுதி தீப்பற்றியதால் இடிந்து விழுந்தது. எனினும், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்